வணக்கம் நண்பர்க்ளே!
அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
நமது
தளத்தில் நாம் இது வரை EXCEL இல் இருக்கும் பல வசதிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப்
பார்த்துவருகிறோம். அந்த வகையில் VBA MACRO மூலம் எப்படி நமது வேலையை சுலபமாக செய்வது
என்பதையும் பார்த்துவருகிறோம்.
போன
பதிவில் பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை VBA MACRO மூலம் எப்படி பயன்படுத்துவது என்று
பார்த்தோம் அந்த பதிவு ஒரு சிறு உதாரணமே..
இன்றைய பதிவில்
ஒரு உதாரணம் பார்ப்போம்…
கோபம்,
பொறுமை இந்த இரண்டு வார்த்தைகளும் பல மனிதர்களுக்கு பல அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
உதாரணமாக நம்மில் பல பேர் கோபமாக TELE CALLING துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகளிடம்
பேசிவிடுவதுண்டு ஆனால் இவை அனைத்தையும் பொறுமையாகக் கையாள்வதும் அவர்களின் திறமையான
அனுபவமே.
அப்படிப்பட்ட
பொறுமையான TELE CALLING துறையில் பணிபுரியும் நண்பர்களுக்காக எப்படி அவர்களின் வேலைகளை
EXCEL மூலம் சுலபமாக்குவது என்றுப் பார்ப்போமா..
சரி
அவர்கள் மேற்கொள்ளும் வேலையை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
உதாரணத்திற்கு
ஒரு WATER FILTER SERVICE நிறுவனத்தின் TELECALLING நண்பருக்கு…
1) ஒரு
நாளைக்கு சுமார் 200 முதல் 500 வரை தொலைபேசி எண்கள் தருவார்கள்.
2) ஒவ்வொரு
எண்ணிற்கும் போன் செய்து WATER FILTER SERVICE தேவையிருக்கின்றதா இல்லையா என கேட்க
வேண்டும்.
3) விருப்பம்
இருப்பவர்கள் எண்களை தனியாக குறித்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் அந்த எண்களை அடுத்த நண்பருக்குக்
கொடுத்தால் தான் அந்த வேலை முடியும்.
4) விருப்பம்
இல்லாதவர்களின் எண்களை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் ( சிறிது நாட்கள் கழித்து மீண்டும்
தொடர்புகொள்ள )
5) பிஸியாக
அல்லது உபயோகமில்லா எண்களை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் ( மீண்டும் தொடர்புகொள்ள
)
6) சில
நண்பர்கள் சில நாட்கள் கழித்து தொடர்புகொள்ள சொல்லியிருப்பார்கள் அந்த எண்களை தனியாக
வைத்துக்கொள்ள வேண்டும் ( சிறிது நாட்கள் கழித்து மீண்டும் தொடர்புகொள்ள )
7) இதற்கிடையில்
அவ்வப்போது தன்னுடைய TEAM LEADER ரிடம் தற்போதைய நிலை STATUS REPORT எவ்வளவு முடிந்திருக்கிறது,
எவ்வளவு மீதி இருக்கிறது, எவ்வளவு விருப்பம், எவ்வளவு விருப்பமில்லை போன்ற விபரங்களைத்
தெரிவிக்க வேண்டும்.
என்ன
நண்பர்களே படித்துக்கொண்டிருக்கும் போதே உங்களின் எண்ணம் இதிலெண்ண சிரமம் இருக்கப்
போகிறது, எண்ணை காப்பி செய்து எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மிக
சரிதான் நண்பர்களே! ஆனால் என்னைப் பொருத்தவரை ஒரு வேலையை சாதாரணமாக செய்வதைவிட SMART
ஆக செய்ய வாய்ப்பிருந்தால் SMART ஆக செய்வதுதானே சிறந்தது.
உதாரணமாக
மேலே பார்த்த வேலைகளில் ஒரு வேலைக்கு குறைந்த பட்சம் 10 வினாடிகள் என வைத்துக்கொண்டால்
500 எண்ணிற்க்கு சுமாராக 1.5 மணி நேரம் செலவாகிறது, மற்ற வேலைகளுக்கு…..
இதே
வேலைகளை ஒரு 10 நண்பர் செய்வதென்றால் சுமார் 15 மணி நேரம் செலவாகிறது.
இதையே
ஒரு வேலைக்கு அதிகபட்ச நேரமே ஒரு ( க்ளிக் ) வினாடியாக இருந்தால் அது SMART தானே..
பார்ப்போமா
அந்த SMART வேலையை..
ஒரு 300 எண்கள்
கொண்ட ஒரு DATA SET ஐ “A10” இல் வைத்துக்கொள்வோம்.
நாம் வேலையை தொடங்கும்முன்
ஒரு க்ளிக் செய்தால் முதல் எண் தொடர்புகொள்ள தனியக வந்தால்
அந்த எண்ணைத் தொடர்பு
கொண்டு அவர் விருப்பம் இருக்கிறது என்றால் ஒரு க்ளிக் செய்தால் அந்த எண்ணை LIKE
LIST சேர்த்துவிட்டு அடுத்த எண் தொடர்புகொள்ள தனியாக ரெடியாக இருந்தால்
அடுத்த நபர் விருப்பமில்லை
என்றால் ஒரு க்ளிக் செய்தால் அந்த எண்ணை UNLIKE LIST சேர்த்துவிட்டு அடுத்த எண் தொடர்புகொள்ள
தனியாக ரெடியாக இருந்தால்
அடுத்த நபர் சிறிது
தாமதமாக தொடர்பு கொள்ளவும் என்றால் ஒரு க்ளிக்
செய்தால் அந்த எண்ணை CALL LATE LIST சேர்த்துவிட்டு அடுத்த எண் தொடர்புகொள்ள தனியாக
ரெடியாக இருந்தால்
அடுத்த நபர்
BUSY / NOTRESPONSE என்றால் ஒரு க்ளிக் செய்தால்
அந்த எண்ணை BUSY / NOTRESPONSE LIST சேர்த்துவிட்டு அடுத்த எண் தொடர்புகொள்ள தனியாக
ரெடியாக இருந்தால்
சரி இதுவரை எவ்வளவு
CALLS முடிந்துள்ளது, எவ்வளவு PENDING, LIKE LIST எண்ணிக்கை எவ்வளவு, UNLIKE LIST எண்ணிக்கை
எவ்வளவு, CALL LATE LIST எண்ணிக்கை எவ்வளவு, BUSY / NOT RESPONSE LIST எண்ணிக்கை எவ்வளவு இவையெல்லாம் தானாகவே
FORMULA மூலம் மாறிக்கொண்டால்
சரி எங்கும் செல்லாமல்
அடுத்த நபருக்குக் கொடுப்பதற்காக ஒரே க்ளிக்கில் நமக்குத் தேவையான LIST காப்பியாகி
ரெடியாகி இருந்தால்
இந்த DATA SET
முடிந்தவுடன் ஒரே க்ளிக்கில் சேர்த்துவைத்த DATA CLEAR ஆனால்
என்ன நண்பர்களே
இந்த வேலை SMART ஆ இல்லையா என்பதை சொல்லுங்கள்.
இந்த வேலைகளுக்குத்
தேவையான VBA CODE களில் 90% MACRO RECORD OPTION ஐ பயன்படுத்தி தயார் செய்தது நண்பர்களே,
ஒரு சில வரிகள் மட்டுமே நான் புதிதாக சேர்க்கவேண்டியது இருந்தது.
இது போல் வேறு
துறை சார்ந்த வேலைகளை SMART ஆக மாற்றவேண்டுமா
மீண்டும் ஒரு பதிவில்
சந்திப்போம்...................