வணக்கம் நண்பர்களே!
நீண்ட இடைவெளிக்குப்
பின் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதுவரை நமது பதிவில்
படித்த பதிவுகளின் மூலம் தங்களின் EXCEL வேலைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று
உங்களுக்கு ஒரு நம்பிக்கை தோன்றியிருக்கும் என்று நம்புகின்றேன்.
உங்கள் நம்பிக்கைக்கு
வளம் சேர்க்கும் வகையிலும் தங்களின் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் நமது
அடுத்த பயணத்திற்கு செல்வோம்.
நண்பர்களே போன
பதிவில் MACRO என்றொரு வார்த்தையை கவனித்திருப்பீர்கள்,
அதைப் பற்றித்தான் இனிவரும் பதிவுகளில் நாம் காணப்போகின்றோம்.
நண்பர்களே MACRO
வைப் பற்றி சில நண்பர்கள் அறிந்திருப்பீர்கள், இருப்பினும் நாம் அனைவருக்காகவும் அடிப்படையிலிருந்து
விரிவாகப் பார்ப்போம்.
அதேபோல் MACRO
என்பது சிலருக்கு ஆரம்பத்தில் புரிந்துகொள்ள சற்று தடுமாற்றம் இருக்கும், ஆனால் சரியாக
புரிந்துகொண்டால் இதைவிட சுலபம் வேறில்லை என்று நினைப்பீர்கள்.
அப்படி என்ன இருக்கிறது
அந்த MACRO வில்… MACRO வைப் பற்றிய பொதுவான தகவல்கள்…….
1)
MACRO என்பது முழுக்க முழுக்க நமது நேரத்தை சேமிக்கவும்
நமது வேலைகளை மிக மிக சுலபமாக்கவும் உதவக் கூடிய TOOL ஆகும்.
7)
நாம்
போன பதிவில் பார்த்த DEVELOPER MENU
>>>> INSERT >>> ActiveX Controls இல் உள்ள COMMAND BUTTON , COMBO BOX மற்றும்
உள்ள TOOL கள் VBA மூலம் இயங்கக் கூடியதாகும்.
8) MACRO க்களை இயக்குவதற்காக EXCEL இல் (EXCEL 2007)OFFICE BUTTON >>> EXCEL OPTION >>> TRUST
CENTER >>> TRUST CENTER SETTINGS >>> MACRO SETTINGS
>>> ENABLE ALL MACROS (CLICK) >>> OK கொடுக்கவும்.
இதில் EXCEL இன் பாதுகாப்பின் நலன் கருதி
DEFAULT ஆக DISABLE ஆக இருக்கும். நமக்குத் தெரியாத அல்லது புரியாத VBA CODE களின் மூலம் MACRO க்களை இயக்கினால் நமது EXCEL FILE CORREPT ஆகி விடும் அதற்காகவே இந்த பாதுகாப்பு.
(சில தளங்களில் கிடைக்கும் VBA CODE கள்
தவறானவையாக இருக்கலாம் உஷார் நண்பர்களே…)
நண்பர்களே மேற்கண்ட
விஷயங்கள் எல்லாம் MACRO வைப் பற்றிய பொதுவான
தகவல்கள், மேலும் நிறைய இருக்கின்றது அவைகள் தேவைப்படும் இடத்தில் கவனிப்போம்.
இப்போது MACRO வின் பயனாக எளிதான சில உதாரணங்களைப்
பார்ப்போம்..
4)
குறிப்பிட்ட
RANGE களில் குறிப்பிட்ட தகவலும் குறிப்பிட்ட
RANGE களில் விடையும் கிடைத்தால்….
நன்றாகத்தானே இருக்கும்
நண்பர்களே , இதெல்லாம் மிகவும் அடிப்படையான உதாரணங்களே…..
சரி இப்போது இந்த
உதாரணங்களை இரண்டு விதமாகவும் விளக்கமாகப் பார்ப்போம்
அதாவது RECORD செய்து இயக்கும் முறையும் மற்றும்
VBA CODE எழுதி அதை இயக்கும் முறையும்
விரிவாகப் பார்ப்போம்
முதலில் RECORD செய்து இயக்கும் முறை :
VIEW MENU >>>>>>
MACROS
MACRO வை RECORD செய்வதற்கும் RECORDING
ஐ STOP செய்வதற்கும் EXCEL இல் கீழே STATUS BAR அதற்கான வசதி DEFAULT
ஆக இருக்கும் , அப்படி இல்லையெனில் STATUS
BAR ரைட் க்ளிக் செய்து
MACRO RECORDING என்பதற்கு முன்னால் டிக் செய்யவும்.
இப்போது STATUS BAR இல் உள்ள MACRO RECORD பட்டனை க்ளிக் செய்து…….
இதில்…..
1.) MACRO
வின் பெயர் வைக்கும்போது
எழுத்துகளுக்கு இடையே கண்டிப்பாக இடைவெளி இருக்கக் கூடாது, அப்படி தேவையெனில் “ _ “ பயன்படுத்திக்கொள்ளலாம் ( aa_bb_cc ).
2.) SHORTCUT
KEY தேர்வு செய்யும் போது
“ Caps Lock “ ON இல் இருந்தால் Ctrl + (உங்கள் விருப்பமான எழுத்து) என்றும்
“ Caps Lock “ OFF இல் இருந்தால் Ctrl + Shift + (உங்கள் விருப்பமான எழுத்து) என்றும் மாறுவதைக் கவனிக்கவும்.
3.) நீங்கள் RECORD செய்யும் MACRO வை
சேமிக்க மற்றும் இயக்க தற்போது இயங்கும் இந்த EXCEL இல் மட்டும் பயன்படுத்தவா அல்லது அனைத்து EXCEL ல்லிலுமா என்பதில் DEFAULT ஆக இருக்கும் “ THIS
WORKBOOK “ என்பதே இருக்கட்டும்.
4.) இங்கு இந்த MACRO பற்றிய குறிப்புகள் எழுதிக் கொள்ளலாம் (தேவையெனில்).
தேவையான
செல்லை தேர்வு செய்து( eg : C4 ) உங்களுக்குத்
தேவையான முகவரியோ அல்லது ஏதேனும் தகவலை உள்ளீடு செய்யவும்.
இப்போது
அதை DELETE செய்துவிட்டோ அல்லது வேறு SHEET ல்லோ சென்று நீங்கள் தேர்வு செய்த SHORTCUT KEY யை அழுத்தினால் அதே செல்லில்
உள்ளீடு செய்த தகவல் வந்திருப்பதைப் பார்க்கலாம்.
குறிப்பு:
நீங்கள் உள்ளீடு செய்யும் போது தேர்வு செய்த செல்லில் மட்டுமே ( eg : C4 )ஆரம்பிக்கும்.
மற்றொரு
முறைய அடுத்த பதிவில் பார்க்கலாம்……..
படித்ததில்
பிடித்தது…..
விடியும் என்று விண்ணை நம்பும் நீ….
முடியும் என்று உன்னை நம்பு…….