Sunday, 26 July 2015

developer menu tamil tips



வணக்கம் நண்பர்களே,

உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி…

இன்றைய சூழலில் EXCEL ஐ கற்றுக் கொள்ள பல கை தேர்ந்த ஆசிரியர்களால் பல தகவல்களை இனைய தளங்களில் வெளியிடுகிறார்கள்.
முதலில் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றேன்.
ஏனெனில் நானும் பல ஆசிரியர்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றேன்.

இருப்பினும் இறைவன் அருளால் எனது தமிழ் நண்பர்களுக்காக எனது தாய் மொழியில் எனக்குத் தெரிந்தவற்றை எளிய முறையில் பகிர்வதும்,
அவற்றை நிறைய நண்பர்கள் பார்த்து ஆதரவு தருவதை நினைக்கும் போது எனது வேண்டுதலுக்குக் கிடைத்த வரமாக கருதுகிறேன்….

சரி நண்பர்களே இன்றைய பதிவிற்கு போகும் முன் மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன் .
தங்களின் EXCEL பணிகளை மேம்படுத்த முடியும், மிக மிக சுலபமாக்க முடியும், மிகத் துள்ளியமாக செய்ய முடியும்…..
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கொஞ்சம் கேள்வி, கொஞ்சம் பயிற்சி அவ்வளவுதான்…
அதற்கு எனது பதிவுகள் ஓரளவுக்கு உதவியாக இருக்கும்….

இதுவரை பதிந்த 12 பதிவுகளும் பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள் என்றும், உதவியாக இருந்திருக்கும் என்றும் நம்புகின்றேன் …..

உங்களை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன் என்ன நண்பர்களே ரெடிதானே…..

EXCEL இல் MACRO என்ற வார்த்தையை தங்களில் பலரும் கேள்விபட்டிருப்பீர்கள்,
MACRO என்பது MICROSOFT VISUAL BASIC என்ற PROGRAMME இல் எழுதப்படும் VBA CODE இன் அடிப்படையில் EXCEL இயங்கும். 
அய்யையோ எனக்கு VBA CODE எழுத தெரியாதே! பயப்படாதீர்கள் நண்பர்களே EXCEL இல் அதற்கும் தீர்வு வைத்துள்ளார்கள்.

MACRO வைப் பற்றி இனி வரும் பதிவில் விரிவாக பார்க்கலாம் நண்பர்களே,

இந்த பதிவில் முக்கியமான DEVELOPER MENU வைப் பற்றி பார்ப்போம்.

இந்த MENU வானது பாதுகாப்பின் நலன் கருதி நமது MENU பாரில் 
இருக்காது, நாம்தான் அதை வரவைக்கவேண்டும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…










அப்படி என்ன இருக்கிறது  இந்த MENU வில்…

CODE என்ற பகுதியை MACRO வின் பதிவில் பார்க்கலாம்
CONTROLS என்ற பகுதியில் INSERT >> ACTIVE X CONTROLS என்ற பிரிவை MACRO வின் பதிவில் பார்க்கலாம்

இப்போது CONTROLS என்ற பகுதியில் INSERT >> FORM CONTROLS என்ற பிரிவை பார்ப்போம்…

  
CONTROLS என்ற பகுதியில் INSERT >> FORM CONTROLS இல் உள்ள உட்பிரிவுகள்:
1.) BUTTON (FORM CONTROL)
2.) COMBO BOX (FORM CONTROL)
3.) CHECK BOX (FORM CONTROL)
4.) SPIN BUTTON (FORM CONTROL)
5.) LIST BOX (FORM CONTROL)
6.) OPTION BUTTON (FORM CONTROL)
7.) LABEL (FORM CONTROL)
8.) SCROLL BAR (FORM CONTROL)

1.) BUTTON (FORM CONTROL)
     DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> BUTTON

இந்த BUTTON ஆனது நாம் உருவாக்கியுள்ள MACRO க்களை செயல் படுத்த உதவும்.
   

2.) COMBO BOX (FORM CONTROL)
     DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> COMBO BOX இவை எதற்கு பயன்படும் என்றால் ..

உதாரணமாக:

ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளில் நாம் உள்ளீடு செய்துள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றுதான் தேர்வு செய்ய வேண்டும் , அப்படி தேர்வு செய்த தகவல் ஒரே ஒரு குறிப்பிட்ட செல்லில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்…

  






 





3.) CHECK BOX (FORM CONTROL)
     DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> CHECK BOX இவை எதற்கு பயன்படும் என்றால் ..

CHECK BOX இல் நமக்கு வேண்டிய பெயரை வைத்துக் கொள்ளலாம்
டிக் செய்தால் ஒரு குறிப்பிட்ட செல்லில் TRUE என்றும்
டிக் செய்யாவிட்டால் அதே செல்லில் FALSE என்றும் வரவைக்க முடியும்…

 





 
 

 






4.) SPIN BUTTON (FORM CONTROL)
     DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> CHECK BOX இவை எதற்கு பயன்படும் என்றால் ..

ஒரு குறிப்பிட்ட செல்லில் (உதா) 5 முதல் 250 வரை 5 இன் மடங்காக எண் கூட்டவோ அல்லது குறைக்கவோ வேண்டும்…
 










என்ன நண்பர்களே இந்த நாண்கை பயிற்சி செய்யுங்கள் மீதி நாண்கை அடுத்த பதிவில் பார்ப்போம்…….

>>>>>>>>>>>இனையத்தில் படித்து பிடித்த வரிகள்….

பக்கங்களைப் புரட்டுவதல்ல புத்தகம்…..
     உங்களை புரட்டிப்போடுவதுதான் புத்தகம்…….

நிறைய படியுங்கள்
     நிறைய சாதியுங்கள்…………………..

அன்புடன்………….சுரேஷ்…….