Thursday, 6 August 2015

developer menu tips in tamil



வணக்கம் நண்பர்களே,

உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி…

நண்பர்களே எனது பதிவுகளை படிக்கும் உங்களிடம் முதன் முறையாக ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்…

உங்களுக்காக சிரத்தையெடுத்து (வருமாண நோக்கமின்றி) எழுதும் எனது பதிவுகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு போரடிக்கும்..

ஆனால் இது போன்ற தகவல்கள் தமிழில் கிடைக்காதா என வருடக் கணக்காக ஏங்கி கொண்டிருக்கும் என்னைப் போன்று..

EXCEL இல் ஆர்வமுள்ள பல நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் உங்கள் அருகில் கூட இருக்கலாம்..

அதனால் அவர்களுக்காக உங்களுக்கு விருப்பமில்லையென்றாலும் தயக்கமின்றி SHARE மட்டும் செய்யுங்கள் அது போதும்…….

நமது பதிவில் இதுவரை IF FORMULA , VLOOKUP FORMULA , HYPERLINK , IMAGE CROP , CONDITIONAL FORMATTING , DATA VALIDATION , PIVOT TABLE , CELLSTYLE , TEXT TO COLUMN , WHAT IF ANALYSIS ,  மற்றும் DEVELOPER TOOL ஆகிய பகுதியை விளக்கமாகப் பார்த்தோம்….. 

இந்த பதிவில் DEVELOPER TOOL பதிவின் மீதியைப் பார்ப்போம்..
CONTROLS என்ற பகுதியில் INSERT >> FORM CONTROLS என்ற பிரிவில்

முந்தைய பதிவில் பார்த்தது:





இந்தப் பதிவில் பார்ப்பது

5.) LIST BOX (FORM CONTROL)

6.) OPTION BUTTON (FORM CONTROL)

7.) LABLE (FORM CONTROL)

8.) SCROLL BAR (FORM CONTROL)


5.) LIST BOX (FORM CONTROL)

DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> LIST BOX இவை எதற்கு பயன்படும் என்றால் .
.
இதன் பயன் COMBOBOX இன் பயன் போலவே இருக்கும் சற்று மாறுபடும..

ஒரு குறிப்பிட்ட ரேஞ்சுகளில் நாம் உள்ளீடு செய்துள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்தவுடன், தேர்வு செய்த தகவல் ஒரே ஒரு குறிப்பிட்ட செல்லில் அந்த தகவலின் வரிசை எண் வெளிப்படுத்தும், அந்த எண்ணை வைத்து VLOOKUP FORMULA மூலம் நமக்கு வேண்டிய தகவலை வரவைத்துக்கொள்ளலாம்.( மன்னிக்கவும் இந்த விஷயத்தை முந்தைய பதிவில் COMBO BOX க்கு தெரிவிக்க மறந்துவிட்டேன் )







LIST BOX ரைட் க்ளிக் செய்து…
  



  

LIST BOX ரைட் க்ளிக் செய்து… MULTI  என தேர்வு செய்தால் கீழே உள்ளது போல் இருக்கும் ஆனால் வரிசை எண் வெளிப்படுத்தாது






LIST BOX ரைட் க்ளிக் செய்து… EXTENDED  என தேர்வு செய்தால் கீழே உள்ளது போல் இருக்கும் ஆனால் வரிசை எண் வெளிப்படுத்தாது
 







அவ்வளவுதான்

6.) OPTION BUTTON (FORM CONTROL)

DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> OPTION BUTTON இவை எதற்கு பயன்படும் என்றால் ..

இதன் பயன் CHECK BOX இன் பயன் போலவே இருக்கும் சற்று மாறுபடும் ..

அதாவது நமக்கு வேன்டிய அளவு OPTION BUTTON களை வரவைத்து அதற்கு நமக்கு தேவையான பெயர் வைத்துக் கொள்ளவேண்டும்.

பின்பு நாம் எத்தனையாவது BUTTON ஐ தேர்வு செய்கிறோமோ அதன் வரிசை எண் ஒரு செல்லில் வெளிப்படுத்தலாம் அதை வைத்து VLOOKUP FORMULA மூலம் நமக்கு வேண்டிய தகவலை வரவைத்துக்கொள்ளலாம்….
(ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும் அதேபோல் ஒரே செல்லில் மட்டுமே வரிசை எண் வெளிப்படுத்த முடியும்)
 







OPTION BUTTON ரைட் க்ளிக் செய்து…பெயர் மாற்றிக் கொள்ளலாம், பின்பு FORM CONTROLS …….
 







அவ்வளவுதான்

7.) LABLE (FORM CONTROL)

DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> LABLE இவை எதற்கு பயன்படும் என்றால் ..

LABLE என்பது  MACRO க்களை இயக்க உதவலாம், குறிப்புகள் குறிக்கலாம்….
 







LABLE ரைட் க்ளிக் செய்து…தேவையான தகவல்களை டைப் செய்து கொள்ளலாம்
 







அவ்வளவுதான்..

8.) SCROLL BAR (FORM CONTROL)

DEVELOPER >> INSERT >> FORM CONTROLS >> SCROLL BAR இவை எதற்கு பயன்படும் என்றால்..

இதன் பயன் SPIN BUTTON இன் பயன் போலவே இருக்கும் சற்று மாறுபடும் ..

SPIN BUTTON இல் நமக்கு தேவையான எண்களுக்கு கூட்டவோ அல்லது குறைக்கவோ CLICK மட்டும் செய்தோம், இதில் CLICK ம் செய்யலாம் 
SCROLL ம் செய்யலாம்..

 







SCROLL BAR ரைட் க்ளிக் செய்து…

 







அவ்வளவுதான்…

என்ன நண்பர்களே புரிந்ததா?  ஒரு முறையேனும் பயிற்சி செய்து பாருங்கள் நிச்சயமாகப் புரியும், இவையெல்லாம் நமக்கு எங்கு பயன்படப்போகின்றது என அலட்சியம் வேண்டாம் நண்பர்களே கற்றல் என்ற நல்ல விஷயம் என்றைக்குமே உதவும் நமக்கில்லாவிட்டாலும் நமது வேண்டியவர்களுக்கு….

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்………

படித்ததில் பிடித்தது….
            முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்
                  முடியவில்லையெனில் பயிற்சி செய்யுங்கள்……

---------சுரேஷ்