வணக்கம் நண்பர்களே!
நாம் இதுவரை படித்த
பதிவுகளில் EXCEL
லில் பல முக்கியமான விஷயங்களைப் பார்த்தோம், இந்த பதிவில் ஒரு வேலையை குறுகிய நேரத்தில்
சுலபமாக எப்படி செய்வது எனப் பார்ப்போம்.
நேரம்! இதைப்பற்றி
நம்மில் பலர் அடிக்கடி கூறிக்கொள்வது நேரமே போதவில்லை, நேரமிருந்தால் இன்னும் கொஞ்சம்
வேலை செய்திருப்பேன், நேரமிருந்தால் வந்திருப்பேன், இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே
போகலாம்.
இன்னும் சொல்லப்போனால்
பலருக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே நேரமில்லை…..
சரி அதற்கும் நம்
தளத்திற்கும் என்ன சம்பந்தம்!
கண்டிப்பாக இருக்கிறது
நண்பர்களே, இன்றைக்கு பல துறைகளில் (DATABASE)
தகவல்களை கையாள்வதில் நம்மை அறியாமலே நம் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது.
அப்படி வீணாகும்
நேரமிருந்தாலே மேலே கூறிய பலவற்றைப் பெற முடியும் அல்லது நம் வேலையை இன்னும் மெருகேற்ற
முடியும்.
அதெப்படி சாத்தியம்!
EXCEL
VBA PROGRAMMING மூலம்
பல வேலைகளை சுலபமாக செய்ய முடியும்,
நாம் இதைப்பற்றி முந்தைய பதிவில் VBA MACRO வில் RECORD செய்து எப்படி இயக்குவது எனப் பார்த்தோம்.
இந்த பதிவில் VBA CODES நாமாக எழுதுவதன் மூலம் எப்படி ஒரு வேலையை
சுலபமாக செய்யலாம் எனப் பார்ப்போம்.
ஒரு உதாரணம்:
உங்களிடம் ஒரு
பள்ளியின் ஒரு வகுப்பின் 20 (அல்லது 200,300,400….) மாணவர்களின் அடையாள எண், பெயர், தேர்வு
வாரியாக மதிப்பெண்கள் EXCEL
ல் இருக்கிறது.
ஏதோ ஒரு குறிப்பிட்ட
காரணத்திற்காக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்களையும் தனியாக மற்றும் தேர்வு
வாரியாக பார்வையிட நேருகிறது.
இப்போது நீங்கள்
எப்படி இந்த வேலையை செய்வீர்கள், (2
நிமிடம் இதை MINIMIZE
செய்துவிட்டு யோசியுங்கள் அல்லது முயற்சி செய்யுங்கள்).
உதாரண மதிப்பெண்
பட்டியல்:
நிச்சயம் இதைப் பலதரப்பட்ட நண்பர்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்.
EXCEL நன்றாகத் தெரிந்த நண்பர்கள் இதை சுலபமாக செய்துவிடுவீர்கள்.
ஓரளவுக்குத் தெரிந்த மற்றும் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள நண்பர்கள் முயற்சி செய்திருப்பீர்கள்.
சில நண்பர்கள் இது நமக்குத் தேவையில்லாதது என நினைப்பீர்கள்.
யாரும் அப்படி நினைக்க வேண்டாம் நண்பர்களே!
இது வெறும் உதாரணம்தான், இதுபோல் கல்வி, மருத்துவம், வியாபாரம், தொழில், வங்கி போன்ற பல துறைகளுக்கும் இதைவிட பெரிய வேலையாகக்கூட இருக்கலாம். அதையும் சுலபமாக்கலாம்.
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்….
சில நண்பர்கள் சட்டென்று மாணவரின் அடையாள எண்னைக் கொண்டு VLOOKUP FORMULA மூலம் மதிப்பெண்ணை வரவைத்திருப்பீர்கள்.
சில நண்பர்கள் அதையும் CHART வடிவத்தில் வரவைத்திருப்பீர்கள்.
சரி 20 அல்லது 200 மாணவரின் எண்னையும் நாமாகத்தானே உள்ளீடு செய்ய வேண்டும்!
இதற்கு மாற்றுவழியாக தானாக வரிசையாக அடையாள எண் மற்றும் மதிப்பெண்கள் வரும்படி யோசிப்போமா?
அதிலும் ஒவ்வொரு மாணவரும் எதில் FAIL எதில் CENTUM என்பதையும் வெகுசுலபமாக பார்க்கும்படி யோசிப்போமா?
இந்த இரண்டு முறையையும் ஒரே க்ளிக் செய்துவிட்டு நாம் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்கும்படி இருந்தால் நன்றாகத்தானே இருக்கும்!
அதையும் தேவையானால் PAUSE செய்யும்படியோ அல்லது முதலிலிருந்து பார்ப்பதற்காக RESET வசதியும் இருக்கும்படி யோசிப்போமா?
முடியுமா? VBA CODE களில் சில வரிகளின் மூலம் நிச்சயம் முடியும்.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம?
1.)முதலில் உள்ளீடு செய்யும் மாணவரின் அடையாள எண்னைக் எண்ணைக் கொண்டு VLOOKUP FORMULA மூலம் மொத்த மதிப்பெண்களையும் வரவைத்துக்கொள்வோம்.



2.)அதை தனித் தனியாக அல்லது மொத்தமாக CHART வடிவத்தில் வரவைப்போம்.


3.)ஒரு இடத்தில் மாணவர்களின் அடையாள எண்ணோடு மொத்த எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் S.NO சூட்டிக்கொள்ளுங்கள்.
4.)இப்போது நாம் ஏதாவது எண்ணை S.NO உள்ளீடு செய்து அதன் மூலம் VLOOKUP FORMULA மூலம் மாணவர்களின் அடையாள எண்ணை வரவைப்போம்.

5.)இப்போது VBA வை திறந்து (ALT+F11), INSERT >>> MODULE திறந்துக் கொண்டு கீழே இருக்கும் VBA CODE களை உள்ளீடு செய்யுங்கள்.

6.)அவ்வளவுதான் இப்போது இந்த VBA CODE ஐ இயக்குவதற்காக INSERT >>> SHAPES சென்று ஏதேனும் 2 SHAPES வரைந்துக் கொள்ளுங்கள், அதில் RIGHTCLICK>>EDIT TEXT சென்று START/PAUSE மற்றும் STOP/RESET
என்று உள்ளீடு செய்யவும்.
7.) START/PAUSE என்ற SHAPES ல் RIGHTCLICK >>> ASSIGN MACRO >>> start_pause என்ற MACRO வை SELECT செய்து OK கொடுக்கவும்.
8.) STOP/RESET என்ற SHAPES ல் RIGHTCLICK >>> ASSIGN MACRO >>> reset என்ற MACRO வை SELECT செய்து OK கொடுக்கவும்.

9.) இறுதிகட்டமாக HOME >>. CONDITIONAL FORMATTING >> NEW RULE (ALT+H+L+R) சென்று மதிப்பெண்ணுக்குத் தகுந்தாற்போல் நிறத்தை செட் செய்து கொள்ளவும்.


இப்போது START/PAUSE என்ற
SHAPE ஐ CLICK செய்துபாருங்கள் தானாக வேலை நடப்பதைப் பாருங்கள்.
PAUSE செய்ய வேண்டுமென்றால் மீண்டும் CLICK செய்யுங்கள் நீங்கள் திரும்ப இதை CLICK செய்யும்வரை காத்திருக்கும்.
இப்போது STOP/RESET என்ற SHAPE ஐ CLICK
செய்துபாருங்கள் தானாகவே நின்று அடுத்து ஆரம்பம் முதல் பார்ப்பதற்கு ரெடியாக இருக்கும்.
அவ்வளவுதான் நண்பர்களே!
முடிந்தது…
ஒருவேலை இதை யாராவது
முயற்சி செய்தால் முடித்துவிட்டு SAVE
செய்யும்போது “MACRO ENABLEED WORKBOOK” என்ற FILE TYPE ல் SAVE செய்யவும்.
சேமித்த FILE ஐ OPEN செய்தவுடன் SECURITY SETTINGS….. ENABLE….என்று
FORMULA
BAR க்கு கீழெ தெரியும்
அதில் ENABLE….க்ளிக்
செய்து ENABLE CONTENT
என்பதை க்ளிக் செய்து OK கொடுத்தால் மட்டுமே MACRO வை இயக்க முடியும்.
என்ன நண்பர்களே
கண்டிப்பாக பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
அடுத்த பதிவில்
TELE CALLING துறை
சம்பந்தமாக எப்படி வேலையை சுலபமாக்கலாம் எனப் பார்க்கலாம்.
இப்போது விடை பெறுகிறேன்,
மீண்டும் சந்திப்போம்……..