Sunday, 24 April 2016

Vba Code tamil tips

வணக்கம் நண்பர்களே!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி…..

தாமதத்திற்கு மன்னிக்கவும்….

இதுவரை பதிந்த பதிவுகளுக்கு தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி…

நமது தொடரின் படி நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது நாம் VBA CODE எழுதுவதன் மூலம் எப்படி MACRO வை இயக்குவது என்று பார்க்கலாம்.

அதற்கு முன் இந்த இடைவெளியில் நண்பர்கள் சிலர் வைத்த கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு…..

1) நண்பரே எனக்கு FORMULA  வில் இன்னும் விளக்க முடியுமா?

2) நண்பரே எனக்கு PIVOT TABLE ல் இன்னும் விளக்க முடியுமா?

3) நண்பரே எனக்கு CHART பற்றி விளக்க முடியுமா?

4) நண்பரே எனக்கு DEVELOPER MENU ACTIVE X CONTROL ல் இன்னும் விளக்க முடியுமா?

5) நண்பரே எனக்கு VBA CODE WRITTING ல் இன்னும் விளக்க முடியுமா?

6) நண்பரே எனக்கு நன்றாக வரையத் தெரியும் அதனால் EXCEL ல் 
DRAWING பற்றி இன்னும் விளக்க முடியுமா?

எனது நண்பர்களின் வேண்டுகோள்களை என்னால் முடிந்த வரை நிறைவேற்றுவதற்கு நான் இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்….


சரி இன்றைய பதிவிற்கு வருவோம்……..

VBA CODE WRITTING என்பது சிலர் பயப்படும்படி கடினமான விஷயம் கிடையாது இது போன்ற தளங்களில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளுக்கான VBA CODE களை ஆராய தொடங்குங்கள், தானகவே எழுத பழகிவிடும்….

என்ன கொஞ்சம் பெரிய வேலைகளுக்கான VBA CODE களை படிக்கும்போது மட்டும் புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கலாம்…

VBA CODE களை எழுதுவதற்கு முன்னால் நாம் இதைப் பற்றி சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியமகும் அவை:

1) ALT+F11 VBA என்பது க்குச் செல்ல SHORT CUT ஆகும்.

2) MODULE என்பது நாம் எழுதும் CODE களை இதில் எழுதுவதால் MACRO வின் மூலம் இயக்கலாம்.

3) MODULE என்பது இருக்கும் இடம் (VBA)MENU வில் INSERT >> MODULE.

4) எழுதிய VBA CODE களை COMMOND BUTTON , SHAPES , PICTURES (ASSIGN MACRO) மூலம் இயக்கிக் கொள்ளலாம்.

5) சில VBA CODE களை  WORKSHEET (SHEET) களில் எழுதுவதால் மட்டுமே அதன் பயன்களை அடையமுடியும்.

(மேலும் தேவையான தகவல்களை தேவையான இடங்களில் பார்க்கலாம்)

இப்போது சில உதாரண VBA CODE களைப் பார்ப்போம் பின்பு VBA CODE மூலம் சில வேலைகளைப் பார்ப்போம்…

முதலில் DEVELOPER MENU >> INSERT >> ACTIVE X CONTROL >> COMMOND BUTTON எடுத்துக்கொண்டு வேண்டிய சைசில் ட்ராக் செய்து பின் டபுள் கிளிக் செய்யவும்….


(DEVELOPER MENU உங்கள் கனினியில் தெரியவில்லையெனில் இந்த தளத்தில் ஏற்கனவே பதிந்துள்ள Developer menu tamil tips-1 பதிவில் பார்த்துக் கொள்ளவும்.)






பின்பு இரண்டு வரிகளுக்கு இடையில் நமக்குத் தேவையான CODE ஐ எழுதிக்கொண்ட பின் VBA வை மூடி விடுங்கள்.

பின்பு DEVELOPER MENU >> INSERT >> DESIGN MODE என்பதை க்ளிக் செய்யவும்.

(DESIGN MODE என்பது ACTIVE X CONTROL பயன்படுத்தி VBA CODE எழுத தானாகவே ENABLE ஆகிக் கொள்ளும் நாம் DISABLE செய்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும்)

சில உதாரணங்களை நான் ஒரே COMMOND BUTTON ல் கொடுத்திருப்பேன், நீங்கள் உங்கள் தேவைக்கு தகுந்தாற்போல் வேறு COMMOND BUTTON ல் எழுதிக்கொள்ளுங்கள்.




















சரி நண்பர்களே இதுவரை நாம் COMMOND BUTTON ல் VBA CODE  எழுதி பயன்படுத்துவதைப் பற்றி பார்த்தோம், அடுத்த பதிவில் MODULE மூலம் VBA CODE எழுதுவது மற்றும் சில வேலைகளுடன் VBA CODE உதாரணத்தைப் பார்ப்போம்,


DRAWING பற்றி கேட்ட நண்பருக்காக சிறு உதாரணம்….




INSERT MENU >> SHAPES >> மூலம் வரைந்து அதை BORDER COLOR and FILL COLOR மூலம் முழுமைப் படுத்தியது.......






INSERT MENU >> SHAPES >> மூலம் வரைந்து அதை BORDER COLOR and FILL COLOR மூலம் முழுமைப் படுத்தியது.......





நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போம்….


>>>>தெய்வத்தால் அகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்……..
                                                        
                                                         தொடரும்..............


No comments:

Post a Comment