வணக்கம் நண்பர்களே,
இதுவரை பதிந்த
பதிவுகளை தேவையானவர்கள் பயிற்ச்சி செய்து பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்……..
உங்களுடன் EXCEL
ஐப் பற்றி நிறைய விஷயங்களை (நமது தாய்மொழியில்) பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்,
இறைவன் அருளால் சாத்தியமாகட்டும்…
மேலும் உங்களுக்கு
சலிப்பு ஏற்ப்படாமல் இருக்க மிகவும் அடிப்படையான விஷயங்களை தவிர்த்து அடுத்த பகுதிக்கு
செல்கின்றேன்……
கடந்த வாரம் ஒரு
நண்பர் EXCEL இல் PIVOT
TABLE ஐப் பற்றி விளக்க
முடியுமா எனக் கேட்டிருந்தார்,
அவருக்காகவும் உங்களுக்காகவும் இதோ…
EXCEL இல் PIVOT
TABLE என்பது அருமையான பகுதி,
நிறைய தகவல்களை கையாளுபவர்களுக்கு
இது மிகவும் உபயோகமானதாக இருக்கும்,
உதாரணமாக..
மேற்கண்ட உதாரணத்தில் எத்தனை கேள்வி
கேட்க்கலாம் ?
(எத்தனை வேண்டுமானாலும் கேட்க்கலாம்)
உதாரணமாக..
1)ஒவ்வொரு கடையின் பெயரிலும் எத்தனை
வியாபாரம் நடந்துள்ளன?
2)ஒவ்வொரு பொருள் வீதமாக எவ்வளவு
வியாபாரம் நடந்துள்ளன?
3)ஒவ்வொரு பொருளும் கடையின் பெயரின்
வீதமாக எவ்வளவு வியாபாரம் நடந்துள்ளன?
4)ஒவ்வொரு பொருளும் கடையின் பெயரின்
வீதமாக ஏரியா வீதமாகவும் (தனி தனியாக)எவ்வளவு வியாபாரம் நடந்துள்ளன?
5)ஒவ்வொரு ஏரியாவிலும் குறிப்பிட்ட
தொகை எத்தனை தடவை வியாபாரம் நடந்துள்ளன?
6)மேற்கண்ட அனைத்து கேள்விகளையும்
நான் சார்ட் வடிவத்தில் பார்க்க முடியுமா?
என்ன நண்பர்களே மேற்கண்ட அனைத்து
கேள்விகளுக்கும் நாம் FORMULA க்கள் மூலம் தயார் செய்துவிடமுடியும்…..
ஆனால் என்ன கொஞ்சம் நேரம் செலவாகும்
உண்மைதானே….
நம் அனைவருக்கும் நேரம் என்பது
பொன் போன்றது….
அதனால் நொடிப்பொழுதில் முடித்துவிட
வாய்ப்பு இருக்கும் போது ஏன் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டும்?
சரி இப்போது விளக்கமாக பார்ப்போமா…
1)ஒவ்வொரு கடையின் பெயரிலும் எத்தனை
வியாபாரம் நடந்துள்ளன?
தேவையான RANGE ஐ
தேர்வு செய்து கொள்ளுங்கள்
பின் INSERT >>> PIVOT TABLE
>>> PIVOT TABLE செல்லவும்
இப்படித் தெரியும் இதில் வட்டமிட்டவற்றை
இழுத்து கீழே உள்ளது போல்
விடவும்(கடை பெயரை 2 இடத்திலும் பொருள் 1 இடத்திலும் விடவும்)
அவ்வளவுதான் கடை மற்றும் பொருள்
தலா 4 எண்ணிக்கையில் வியாபாரம் நடந்துள்ளன.
2)ஒவ்வொரு பொருள் வீதமாக எவ்வளவு
வியாபாரம் நடந்துள்ளன?
தேவையான RANGE ஐ
தேர்வு செய்து கொள்ளுங்கள்
பின் INSERT >>> PIVOT TABLE
>>> PIVOT TABLE செல்லவும், கீழே உள்ளது போல் செய்யவும்.
அவ்வளவுதான் கூட்டுத்தொகையோடு
பதில் கிடைத்துவிட்டதா….
3)ஒவ்வொரு பொருளும் கடையின் பெயரின்
வீதமாக எவ்வளவு வியாபாரம் நடந்துள்ளன?
தேவையான RANGE ஐ
தேர்வு செய்து கொள்ளுங்கள்
புதிதாக கடையின் பெயர் உள்ள இடத்தை
கவனிக்கவும். அதன் மூலம் கிடைக்கும் வசதியை கீழே பார்க்கவும்
அவ்வளவுதான்….
4)ஒவ்வொரு பொருளும் கடையின் பெயரின்
வீதமாக ஏரியா வீதமாகவும் (தனி தனியாக)எவ்வளவு வியாபாரம் நடந்துள்ளன?
தேவையான RANGE ஐ
தேர்வு செய்து கொள்ளுங்கள்
என்ன நண்பர்களே தனி தனியாக கூட்டுத்தொகையுடன்
கிடைத்ததா…
5)ஒவ்வொரு ஏரியாவிலும் குறிப்பிட்ட
தொகை எத்தனை தடவை வியாபாரம் நடந்துள்ளன?
தேவையான RANGE ஐ
தேர்வு செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்….
6)மேற்கண்ட அனைத்து கேள்விகளையும்
நான் சார்ட் வடிவத்தில் பார்க்க முடியுமா?
மிகவும் சுலபம் மேலே செய்த வேலையை
அப்படியே செய்யவும் ஆனால் பின் INSERT >>> PIVOT TABLE >>>
PIVOT CHART மூலமாக
அவ்வளவுதான் என்ன நண்பர்களே சுலபம்
தானே முயற்ச்சி செய்துதான் பாருங்களேன்…..
குறிப்பு : நீங்கள் தகவல்களில்
ஏதேனும் மாற்றம் செய்தால் DATA >>>
REFRESH ALL >>> REFRESH ALL கொடுக்கவும் தானாகவே PIVOT TABLE மாறிக்கொள்ளும்…
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்…..