Sunday, 7 June 2015

Data Tools



வணக்கம் நண்பர்களே,

போன பதிவில் ஒரு படத்தில் குறிப்பிட்ட பகுதியை துல்லியமக சுலபமாக EXCEL மூலம் எப்படி CUT செய்வது என்று பார்த்தோம் …

மேலும் DATA TOOLS –இல் உள்ள TEXT TO COLUMNS மற்றும் DATA VALIDATION ஆகியவற்றை கடந்த பதிவுகளில் விரிவாக பார்த்தோம்…. 

இந்த பகுதியில் இந்த TOOLS –இல் WHAT IF ALAYSIS என்ற பகுதியை பார்ப்போம்,

WHAT IF ANALYSIS –இல் DATA TABLE , GOAL SEAK , SCENARIO MANAGER ஆகிய மூன்று TOOLS உள்ளன. இந்த மூன்று TOOLS களும் அவ்வளவாக பலரும் பயன்படுத்துவதில்லை, 

அதற்கு காரணம் இதன் வேலைகளை FORMULA க்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

இருப்பினும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் சில வேலைகளை சுலபமாக முடித்துவிடலாம்….

உதாரணத்திற்கு..

ஒருவர் 150.00 ரூ வைத்துள்ளார் அவர் ஆப்பிள் வாங்க கடைக்கு செல்கிறார். ஒரு கிலோ ஆப்பிள் 25.00 ரூ என வைத்துக்கொண்டால் 6 கிலோ வாங்க முடியும்,





இப்போது சின்ன மாற்றம், விலை 25.00 ரூ க்கு பதில் வேறு பல விலைகளை நிர்ணயம் செய்து ஒவ்வொரு விலைக்கும் எவ்வளவு எடை கிடைக்கும். இந்த கேள்விக்கு DATA TABLE மூலம் சுலபமாக பதிலை பார்ப்போம்.
 




முதலில் F8:G14 தேர்வு செய்து DATA >> WHAT IF ANALYSIS >> DATA TABLE செல்லவும்.

 




அவ்வளவுதான் ! நாம் G8 இல் மட்டுமே FORMULA வை பயன்படுத்தியுள்ளோம் என்பதை கவனிக்கவும்...

சரி இன்னொரு கேள்வியை பார்ப்போம் அந்த நபரிடம் 150.00 ரூ க்கு பதில் வேறு சில தொகையை நிர்ணயம் செய்து மேற்கண்ட விலைகளுக்கான எடையை எப்படி கண்டுபிடிப்பது… பார்ப்போமா?

 


இப்போது F29:K35 தேர்வு செய்து DATA >> WHAT IF ANALYSIS >> DATA TABLE செல்லவும்…

 


அவ்வளவுதான் ! நாம் F29 இல் மட்டுமே FORMULA வை பயன்படுத்தியுள்ளோம் என்பதை கவனிக்கவும்.

அடுத்து GOAL SEAK ஐப் பற்றி பார்ப்போம்  ALT + T + G

DATA >> WHAT IF ANALYSIS >> GOAL SEAK

உதாரணத்திற்கு..

ஒருவர் 150.00 ரூ வைத்துள்ளார் அவர் ஆப்பிள் வாங்க கடைக்கு செல்கிறார். ஒரு கிலோ ஆப்பிள் 25.00 ரூ என வைத்துக்கொண்டால் 6 கிலோ வாங்க முடியும் 

இதில் ( 150 / 25 = 6 ) இறுதி விடையை வைத்து விலை மற்றும் கையிருப்பை மாற்றலாம்

கேள்வி 1 >> 17 கிலோ வாங்க கிலோ 25.00 ரூ எனில் எவ்வளவு ரூபாய் இருக்க வேண்டும்?

கேள்வி 1 >> விளக்கம்…

  

  


OK அவ்வளவுதான்!

கேள்வி 2 >> 20 கிலோ வாங்க 300.00 ரூபாய் உள்ள நபர் எந்த விலையில் வாங்க வேண்டும்?

கேள்வி 2 >> விளக்கம்…
 






OK அவ்வளவுதான்!

அடுத்தது SCENARIO MANAGER 

DATA >> WHAT IF ANALYSIS >> SCENARIO MANAGER

உதாரணத்திற்கு

ஒருவர் வாரத்தில் ஒரு நாள் நான்கு வகைப் பழங்களை மூன்று வாரமாக வாங்குவதாக வைத்துக்கொள்வோம்


 
DATA >> WHAT IF ANALYSIS >> SCENARIO MANAGER





பெயர் தேவையானவாறு டைப் செய்யவும்,

மாற்றம் செய்ய தேவையான செல்களை தேர்வு செய்யவும்.

கம்மான்ட்ஸ் தேவையெனில் டைப் செய்யவும்,

 




இன்னும் புதிய மாற்றம் தேவையெனில் “ ADD “ க்ளிக் செய்யவும் இல்லையெனில்  “OK” க்ளிக் செய்யவும்
 





இப்படி மூன்று வாரத்திற்கு தேவையானவற்றை “ ADD “ செய்த பிறகு

 




இப்போது தேவையான பெயரைத் தேர்வு செய்து SHOW கொடுத்தால் அந்த பெயருக்குத் தகுந்த தகவல் தெரியும்.
 





இதில் SUMMARY என்பதை க்ளிக் செய்தால் விளக்கமாக SUBTOTAL வசதியுடன் கிடைக்கும்

 



அவ்வளவுதான் !
என்ன நண்பர்களே முயற்ச்சி செய்து பாருங்கள் …
                          அடுத்த பதிவில் சந்திப்போம்……











No comments:

Post a Comment