Friday, 29 May 2015

Advanced Image Crop in excel



வணக்கம் நண்பர்களே,

போன பகுதியில் DATA TOOLS பற்றி பார்த்தோம் …

அதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன….. அதற்குமுன் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒரு கேள்வி கேட்டார்,

அந்த கேள்வி தங்களில் பலருக்கும் உதவலாம்… 

அந்த கேள்வி…… நம் கனினியில் வித விதமாக படங்கள் வைத்திருப்போம், அதில் உள்ள படங்களை துல்லியமாக கட் செய்வதற்கு PHOTOSHOP மூலம் அனுபவம் இருந்தால் சுலபமாக முடியும், PHOTOSHOP -ல் அனுபவமில்லாதவர்கள் என்ன செய்வது?  

EXCEL மூலம் இதற்கு தீர்வு உண்டா என கேட்டார்.

இதோ அந்த தீர்வு…..

உங்களுக்கு வேண்டிய படத்தை INSERT >>>>> PICTURE மூலம் INSERT செய்து கொள்ளுங்கள்

உதாரணத்திற்கு….





அடுத்து INSERT >>>>> SHAPES –ல் CURVE TOOL ஐ எடுத்துக்கொள்ளுங்கள்











அடுத்து அந்த படத்தின் உங்களுக்கு தேவையான பகுதியின் மேல் அடுத்தடுத்து CLICK செய்தும் தேவையான இடத்தில் வலைத்தும் படம் வரையவும்.

(படம் மிகவும் DARK ஆக இருந்தால் PICTURES >>>> FORMAT >>>>> BRIGHTNESS சென்று தேவையான அளவுக்கு ADJUST செய்து கொள்ளவும்)

 


அடுத்து அந்த படத்தை செலக்ட் செய்து DELETE செய்யவும்
  
PICTURES >>>> FORMAT >>>>> SHAPE OUTLINE >>> NO OUTLINE சென்று CLICK செய்யவும்.

  
PICTURES >>>> FORMAT >>>>> SHAPE FILL >>> PICTURE சென்று CLICK செய்யவும்.

  
அதே படத்தை INSERT செய்யவும்
   

இப்படித் தெரியும்…. பயப்பட வேன்டாம்… சரி செய்து விடலாம்
   

படத்தின் மீது RIGHT CLICK செய்து FORMAT PICTURE CLICK செய்யவும்.

 








அடுத்து வரும் விண்டோவில் கீழே வட்டமிட்டுள்ளவற்றின் மூலம் மிகச் சரியாக நாம் வரைந்ததிற்குள் பொருத்திவிடலாம்

 








என்ன நன்பர்களே பொருந்திவிட்டதா…….
பிறகென்ன நம் கற்பனைத் திறனை காட்ட வேண்டியதுதானே………………..

 




 




மீண்டும் சந்திப்போம்......