வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில்
நாம் FORMAT
TABLE, CELL STYLES பற்றிப் பார்ப்போம்
FORMAT TABLE…..
நாம் உள்ளீடு செய்யும்
, செய்த தகவல்களை TABLE களாக மாற்றிக் கொள்ளும்
வசதி இருக்கின்றது என அறிந்திருப்போம். அதில் சில DEFAULT மாடல்கள் இருக்கும்,
நாம்
விரும்பும் வண்ணம் TABLE களை உருவாக்க முடியுமா ? முடியும் அதைப் பற்றிப் பார்ப்போம்.
அதற்க்கு முன்
சிலர் நினைக்கலாம் EXCEL முழுவதுமே TABLE போலத்தான் இருக்கின்றன, நாம் ஏன் புதிதாக TABLE
களாக மாற்ற வேண்டும்?
முதலில் இதற்க்கான
விளக்கம்..
உதாரணத்திற்க்கு
ஒரு சீட்டில் 5 மாணவர்களின் மதிப்பெண் தகவல்களை உள்ளீடு செய்துள்ளோம். இந்த தகவல்களை
FORMULA
க்களில் உபயோகிக்கும் போது மதிப்பெண் தகவல்களின்
RANGE
ஐப் பயன்படுத்துவோம் அல்லது அந்த RANGE க்குப் பெயர் வைத்து பயன்படுத்துவோம்.
ஆனால் அதற்கு மாறாக
INSERT>>>
TABLE மூலம் வேண்டிய அளவு RANGE ஐ தேர்வு செய்து, TABLE
களை உருவாக்கிய பின் மதிப்பெண் தகவல்களை உள்ளீடு செய்தால் FORMULA க்களில் உபயோகிக்கும்
போது TABLE
களின் பெயரை மட்டும் பயன்படுத்தினால் போதும்.
இப்போது நாம் விரும்பும்
வண்ணம் TABLE களை உருவாக்குவதைப் பற்றிப் பார்ப்போம்.
HOME >> FORMAT AS
TABLE >> NEW TABLE STYLE
தேவையானவற்றைத்
தேர்வு செய்து பெயரை மாற்றிக்கொள்ளவும்.
இவற்றின் மூலம்
தேவையான மாற்றங்களை தங்கள் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளவும். பின்பு OK கொடுக்கவும்.
அவ்வளவுதான்..இப்போது
உருவாக்கிய TABLE களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் ….
உருவாக்கிய TABLE
களில் RIGHT CLICK செய்து MODIFY மூலம் மாற்றம் செய்துகொள்ளலாம்.
CELL STYLES….
CELL STYLES என்பது செல் மற்றும் RANGE
களின் நிறம் , பார்டர் , தன்மை ஆகியவைகளை ஒருங்கினைந்து மொத்தமாக நிர்ணயம்
செய்துகொள்ளலாம்.
இதிலும் சில DEFAULT மாடல்கள் இருக்கும், நாம் விரும்பும்
வண்ணம் CELL STYLES களை உருவாக்க முடியுமா ? முடியும் அதைப் பற்றிப் பார்ப்போம்.
தேவையானவற்றைத்
தேர்வு செய்து பெயரை மாற்றிக்கொள்ளவும்.
தேவையான மாற்றங்களை
தங்கள் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளவும்.பின்பு OK கொடுக்கவும்
அவ்வளவுதான்..இப்போது
உருவாக்கிய CELL STYLES களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் ….
உருவாக்கிய CELL
STYLES களில் RIGHT CLICK செய்து MODIFY
மூலம் மாற்றம் செய்துகொள்ளலாம்.
என்ன நண்பர்களே
தங்களின் தகவல்களை அழுகுபடுத்த தயாராகிவிட்டீர்களா……
சரி நண்பர்களே
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்……………..
No comments:
Post a Comment