சற்று வெளியூர் பயணத்தால் நீண்ட இடைவெளிக்கு மிகவும் வருந்துகிறேன்….
நண்பர்களே நான் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன் EXCEL - ல் கற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நிறைய விஷயங்கள் உள்ளன, அதில் பொதுவான விஷயங்களை எழுதுகிறேன், தங்களுக்கு வேறு விஷயம் தேவையெனில் cvsuresh006@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்தினால் அதைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன்.
சரி இன்றைய பதிவில் DATA VALIDATION என்ற அருமையான டூலைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த டூலானது DATA TAB – ல் இருக்கும். இவை எதற்கு பயன்படும் என்றால்…..
1) EXCEL- ல் நாம் உள்ளீடு செய்யும் தகவலானது எப்படி இருக்க வேண்டும் எதைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நிர்ணயம் செய்யலாம்.
2)உள்ளீடு செய்யும் நபருக்கு அதைப் பற்றித் தெரிவிக்கலாம்.
3)அதையும் மீறி தவறாக உள்ளீடு செய்தால் எச்சரிக்கை செய்தி தெரிவிக்கலாம்.
4)தவறாக உள்ளீடு செய்தால் சரியான தகவலை உள்ளீடு செய்யும் வரை எச்சரிக்கை செய்தி தெரிவிக்கலாம்.
5)வேறு ஒரு இடத்தில் உள்ளீடு செய்த தகவலை தேர்வு செய்யும்படி செய்யலாம்.
6)FORMULA – க்களைப் பயன்படுத்தியும் தகவலை தேர்வு செய்யும்படி செய்யலாம்.
இப்போது விரிவாகப் பார்ப்போம்..
நாம் உள்ளீடு செய்யும் தகவலானது உதா: 10 முதல் 100 வரை மட்டுமே இருக்க வேண்டுமென்றால்…
என்ன நண்பர்களே DATA VALIDATION என்ற அருமையான டூலைப் பற்றிப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்…
எனதருமை நணபர் ஒரு வித்தியாசமான வேண்டுகோள் விடுத்தார்..அவை
1)நான் ஒரு BUSINESS MAN எனது தொழில் சம்பந்தமாக பலரது சந்திப்பை பதிவு செய்யவேண்டும், சந்திப்பு நிறைவேறியதை பதிவு செய்யவேண்டும், இல்லையேல் நிழுவையில் பதிவு செய்யவேண்டும்,
2)எனது சொந்த செலவு கணக்கைப் பதிவு செய்யவேண்டும், அவற்றின் விபரமும் பதிவு செய்யவேண்டும்
3)எனது பாலிசி சந்தா தொகை மற்றும் முதிவு நாட்களைப் பதிவு செய்ய வேண்டும்,
4)எனது மெயில் மற்றும் முகவரி மற்றும் வங்கி போன்ற சொந்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும்,
5)எனது வாடிக்கையாளரின் முகவரி தொலைபேசி போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்,
6)எனது தொழில் சம்பந்தமாக பணப் பறிமாற்றத்தைப் பதிவு செய்ய வேண்டும், அவற்றின் விபரமும் பதிவு செய்யவேண்டும்,
7)பிறந்த நாள் மற்றும் திருமணம் ஆகிய நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்,
8)மேற்கண்ட விபரம் அனைத்தும் நேரப்படி பதிவு செய்ய 10 வருடத்திற்கான முழுமையான டைரி இருக்க வேண்டும்,
9)அதில் ஒவ்வொரு வருடத்திலும் நான் பதிவு செய்ததை ஒரே இடத்தில் மாதவாரியாகப் பார்க்க வேண்டும்,
10)அதில் ஒவ்வொரு மாததிலும் நான் பதிவு செய்ததை ஒரே இடத்தில் தேதிவாரியாகப் பார்க்க வேண்டும்,
11)அதில் ஒவ்வொரு தேதியிலும் நான் பதிவு செய்ததை ஒரே இடத்தில் நேரம்வாரியாகப் பார்க்க வேண்டும்,
12)அதில் ஒவ்வொரு மாததிலும் நான் பதிவு செய்ததை ஒரே இடத்தில் மொத்த நிகழ்வுவாரியாகப் பார்க்க வேண்டும்,
13)10 வருடத்திலும் நான் பதிவு செய்ததை INDEX மொத்தமும் வருடவாரியாகப் பார்க்க வேண்டும்,
14)அதோடு 1900 முதல் எந்த வருடமாயினும் நான் உள்ளீடு செய்யும் வருடத்தின் முழுமையான நாட்காட்டி வேண்டும்,
15)எத்தனை வாடிக்கையாரின் முகவரி தொலைபேசி போன்ற விபரங்களை பதிவு செய்துள்ளேன் என்ற விபரம் INDEX பார்க்க வேண்டும்,
16)மேலும் நான் பல ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வதால் இரயில் மற்றும் HOSPITALS விபரங்களும் தனியாக வேண்டும்,
17)இவையனைத்தும் ஒரே FILE ஆக வேண்டும்.
என்ன நண்பர்களே தலை சுற்றுகின்றதா ? எனக்கும்தான்…..
எனக்குப் புரிந்துகொள்ள மணிக் கணக்கும் உருவாக்க நாள் கணக்கும் துல்லியமாக செய்து முடிக்க 4 லட்சத்திற்கும் மேல் FORMULA – க்கள் தேவைப்பட்டது……..
அதனால் நீங்கள் முதலில் இந்த கேள்விகளைப் புரிந்துகொள்ளுங்கள்
……….அப்போதுதான் நான் அவருக்கு அளித்த FILE – ன் விபரம் உங்களுக்கு தெரிவிக்கும் போது புரியும்….
………………..நன்றி மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்……………………..
No comments:
Post a Comment