Saturday, 25 April 2015

VLOOKUP WITH MORE FUNCTION TIPS







வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் VLOOKUP உடன் MATCH FUNCTION -ஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்..
முதலில் MATCH FUNCTION –ஐப் பார்ப்போம்.
நாம் குறிப்பிடும் தகவல் நாம் தெரிவிக்கும் படுக்கை வரிசை அல்லது நெடு வரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது எனத் தெரிவிக்கும்.
உதாரணம்:
 


அடுத்து VLOOKUP உடன் MATCH FUNCTION -ஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்,
உதாரணத்திற்க்கு ஒரு தகவல், (உங்கள் தேவைக்கேற்ப எத்தனை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள்)
ஐந்து பாடம் , ஐந்து மாணவர்கள் , ஐந்து வகுப்பு இந்தத் தகவலை எப்படி கையாள்வது எனப் பார்க்கலாம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: FORMULA-க்களை கையாளும் போது ஒரு செல்லின் முகவரியில் $ சிம்பலை எதற்க்காக பயன்படுத்துவது என்பதை புரிந்துவைத்திருப்பது அவசியம், ஏனெனில் எல்லா இடத்திற்கும் பெயர் வைப்பது என்பது சற்று சிரமம் இல்லையா? ஒரு FORMULA –பவை ட்ராக் செய்தால் FORMULA –வில் உள்ள முகவரிகள் மாருவதை கவனித்திருப்பீர்கள், அப்படி ட்ராக் செய்யும் போது குறிப்பிட்ட முகவரி (ex:”A1” என்ற முகவரி) படுக்கை வரிசையாக மட்டும் மாற வேண்டுமென்றால் A$1 எனவும், நெடு வரிசையாக மட்டும் மாற வேண்டுமென்றால் $A1 எனவும், குறிப்பிட்ட முகவரி மாறவேக் கூடாது என்றால் $A$1 எனவும் டைப் செய்யவேண்டும். (இவற்றை இனி வரும் உதாரணத்தில் கவனியுங்கள்)
இப்போது முதலில் முதல் வகுப்பிற்கு பார்க்கலாம்.

 
இப்போது FORMULA-வை முதல் வகுப்பிற்கு பார்க்கலாம்.

 
இப்போது FORMULA-வை ஐந்து வகுப்பிற்கும் பார்க்கலாம்.
 
இப்போது யாராவது ஒருவர் நினைக்கலாம் பெயரையும் பாடத்தையும் போல வகுப்பையும் நான் குறிப்பிடும் தகவலின் அடிப்படையில் எனக்கு பதில் வரவேண்டும் அதுவும் இதே மூலத்தகவல் மூலம் ம்ம் முயற்ச்சி செய்வோமா? சற்று FORMULA பெரிதாக இருக்கும் பரவாயில்லையா? இருக்கட்டுமே! உங்களின் பயிற்ச்சிக்கு உதவட்டும்.
ஓ எஸ் வந்துவிட்டதே!!!!!
(B3) செல்லை TEXT FORMAT –ல் வைத்துக் கொள்ளவும்.
இப்போது புதிய முறையில் FORMULA-வை ஐந்து வகுப்பிற்கும் பார்க்கலாம்.

 


நீங்கள் வகுப்பில் 5 க்கு மேல் டைப் செய்தால் “ NO DATA HERE “ எனத் தெரிவிக்கும்.
 



என்ன நண்பர்களே புரிந்ததா? தங்களின் மேலான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்….

இப்போது எனது நண்பர் ஒருவர் கேட்ட வினோதமான கேள்வியைப் பார்ப்போம்…
1)எனது OFFICE-ல் பல STAFF- கள் ருக்கிறார்கள் அவர்களில் சிலர் ஒரு குறிப்பிட்ட நேரமும் சிலர் வேறு நேரமும் வருவது வழக்கம்.
2)அவரவர் அவருக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வரும் நேரம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு என்பதைப் பொருத்து சம்பளம் பிடித்தம் செய்வது வழக்கம்.
3)இந்த பதிவுகளில் சில குளருபடிகள் நடக்கின்றன, அதே போல் யார் வந்தது, வரவில்லை என்பதை அறிந்துகொள்ள தாமதமாகின்றது.
இவையனைத்திற்கும் EXCEL மூலம் தீர்வு கிடைக்குமா?
அவருக்கு நான் EXCEL மூலம் அளித்த பதில்..
அவருடைய OFFICE-ல் முகப்பில் உள்ள கனினியில் இந்த EXCEL-ன் முதல் சீட்டில் ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வரும் வின்டோவில்



அவரவருடைய ID –ஐ மட்டும் டைப் செய்தால் மட்டும் போதும் அவர் பெயரிட்டு ஒரு வாழ்த்து விண்டோ வரும் அவ்வளவுதான். 







அவரவர்களின் வருகை நேரம், LATE HOURS, LATE HOURS TOTAL ,PRESENT ABSENT DETAILS ஆகிய அனைத்து தகவலும் நண்பரிடம் உள்ள பாதுகாப்பான EXCEL-ல் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.

 



தெய்வத்தால் அகாதாதெனினும் முயற்ச்சி தன் மெய் வருத்தக்            கூலிதரும்>>>>தொடரும்>>>>>>> 




















No comments:

Post a Comment