வணக்கம் நண்பர்களே,
நாம் போன பகுதியில் ரியல் எஸ்டேட் சம்பந்தமான ஒரு கேள்விக்கு பதிலைப் பார்த்தோம்.
இப்போது கனினி விற்பனையாளராகிய ஒரு நண்பரின் கேள்வியைப் பார்ப்போம். இதோடு சில டிப்சையும் பார்ப்போம்.....
கேள்வி: 1)நான் எனது வியாபாரத்தில் கனினி சம்பந்தமான பல பொருட்கள் (ex : Monitor, Mother Board, Hard Disc, Ram…..etc) விற்பனை செய்கின்றேன், அதில் ஒவ்வொரு பொருளும் பல ப்ராண்ட்களில் விற்பனை செய்கின்றேன், இதில் நான் உள்ளீடு செய்யும் INCOMMING மற்றும் SALES ஆகிய தகவலின் அடிப்படையில் STOCK விபரம் துல்லியமாக காட்ட வேண்டும்.
2) எனது வியாபாரத்தில் சில மொத்த விற்பனை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள், அவர்களில் சிலர் தவனை முறையில் பணம் தருவார்கள், இந்த விபரங்களும் நான் உள்ளீடு செய்யும் தகவளுக்கேற்ப மீதிக் கணக்கைத் துல்லியமாக காட்ட வேண்டும்.
அவருக்கு நான் Excel மூலமாக செய்து கொடுத்த பதில்...
1)முதல் சீட்டில் அவர் செய்ய வேண்டிய வேலைகள் (அதாவது பொருளின் பெயர் மாற்றம், வாடிக்கையாளர் பெயர் மாற்றம், விலை மாற்றம், மற்றும் தேதி)
2) அடுத்த சீட்டில் பொருளின் பெயர் மாற்றம், வாடிக்கையாளர் பெயர் மாற்றம், விலை மாற்றம், மற்றும் தேதியை மாற்றம் செய்து கொள்ளலாம்.
3)அடுத்த சீட்டில் (INDEX) இங்கிருந்தே மாற்றம் செய்ய வேண்டிய இடம், தேதியின் அடிப்படையில் வாடிக்கையாளர் மற்றும் பொருளின் INCOMMING, SALES விபரங்களை உள்ளீடு செய்யும் இடத்திற்கு செல்லலாம். அதோடு தேதி, வாடிக்கையாளர் பெயர் மற்றும் பொருளின் அடிப்படையில் தற்போதைய நிலவரத்தைப் பார்க்கலாம். அதோடு அனைத்து பொருட்களின் INCOMMING, SALES, STOCK நிலவரத்தைப் பார்க்கலாம்.
5) அடுத்த சீட்டில் STOCK நிலவரம் விபரமாகப் பார்க்கலாம்.
6) அடுத்த சீட்டில் வாடிக்கையாளரின் பெயர் மற்றும் பொருள் மற்றும் பணம் ஆகிய விபரங்களை தேதி வாரியாக உள்ளீடு செய்யலாம்.
என்ன நண்பர்களே சற்றே போர் அடிப்பதாக தெரிகின்றதா?
அடுத்த சில உதாரணம் பார்க்கும் முன் சில TIPS -ஐ பார்க்கலாம்.
நண்பர்களே EXCEL -லில் உங்களது வேலைகளை மேம்படுத்த நிறைய FORMULA -க்களை பயிற்சி செய்தால் குறிப்பாக IF and VLOOKUP போன்ற FORMULA -க்களை நன்கு பயிற்சி செய்தால் எந்த வேலையும் சிறப்பாக செய்ய முடியும்.
சில நண்பர்கள் IF FORMULA –வை பயண்படுத்த சிரமப்படுகிறார்கள். காரணம் சரியாக IF FORMULA –வை புரிந்து கொள்ளாமையே…….. சரி எப்படி புரிந்து கொள்வது? பார்க்கலாம்.....
உதாரணத்திற்கு நாம் சிறு வயதில் கடைக்குச் செல்லும்படி நம் தாய் ஆனையிடுவார் ஞாபகமிருக்கிறதா “ தம்பி கடையில் பீன்ஸ் இருந்தால் பீன்ஸ் வாங்கு இல்லையேல் கேரட் வாங்கிக் கொண்டு வா ” IF FORMULA என்பது அதேதான்….
MULTIPLE IF “ தம்பி கடையில் பீன்ஸ் இருந்தால் பீன்ஸ் வாங்கு, கேரட் இருந்தால் கேரட் வாங்கு, பீட்ரூட் இருந்தால் பீட்ரூட் வாங்கு, இல்லையேல் முட்டை மட்டும் வாங்கிக் கொண்டு வா ” MULTIPLE IF FORMULA என்பது அதேதான்…
>>>>>>>>>>>கற்றது கையளவு கல்லாதது உலகளவு…………….தொடரும்………………..
No comments:
Post a Comment