Monday, 20 April 2015

Excel Tips in Tamil Introduction

வணக்கம் நண்பர்களே,

இன்றைய Excel பயன்பாடு ஒரு பார்வை....

இன்றைய சூழலில் நாம் அனைவரும் ஏதாவது ஒரு துறையைச் சார்ந்தே பணி புரிகின்றோம் அல்லது தொழில் புரிகின்றோம்.
உதாரணமக ஐடி, ரியல் எஸ்டேட், மருத்துவம், வியாபாரம், வங்கி, கல்வி போன்ற ஏராளமான துறைகள்
நமது பணி அல்லது தொழில் சம்பந்தமான தகவல்களை கனினியில் பெரும்பாலும் Word அல்லது Excel ஆகிய புரோகிராம்களின் உதவியோடு பரிமாற்றம் செய்கின்றோம் அல்லது சேமிக்கின்றோம்.
இன்று ஏனைய துறையில் கணிதம் சம்பந்தமான மற்றும் பணம் சம்பந்தமான தகவல்களை Excel புரோகிராமின் உதவியோடு செய்கின்றோம்.
இதில் பல நண்பர்கள் Excel-லில் இருக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், ஆவரேஜ், இன்னும் சில அடிப்படையான வசதிகளை மட்டுமேப் பயண்படுத்துகின்றனர். இதனால் பலருக்குப் பல மணி நேரம் வீணாகிறது.
Excel-லில் சின்னச் சின்னத் தகவல்களிருந்து எவ்வளவு பெரிய தகவல்களையும் Formulas, Conditional Formating, Chart, Pivot Table, Hyperlink, User Form, Check Box, Combo Box, Spin Button, Lable, Macros,VBA Codes இன்னும் பல வசதிகளோடு நமது பணிகளை அழகாக மெருகூட்டி நேர்த்தியாகவும், துரிதமாகவும், செய்ய முடியும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாவதுடன் பதில்கள் மிகத் துல்லியமாகக் கிடைக்கும்.
அதனால் மேற்கூறிய வசதிகளை நமது ஓய்வு நேரங்களில் பயிற்சி செய்து கொண்டால் நமது வேலைகளுக்கு உபயோகமாக இருக்கும்.
ஆகையால் என்னால் எனக்குத் தெரிந்தவற்றைத் தங்களோடுப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமைக் கொள்கின்றேன்.
எனக்குத் தெரிந்தவற்றைத் தங்களிடம் Tips சேவையைத் தொடங்குவதற்கு முன்னால்…..
முதலில் உதாரணத்திற்கு சில துறையைச் சார்ந்த மற்றும் சில நண்பர்களின் கேள்விகளுக்கு Excel-லில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைத் தெரிவிக்கின்றேன். இதன் மூலம் தங்களின் வேலைகளையும் இன்னும் மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வரும். அதன் பிறகு Tips மூலம் மேலும் பயிற்சி செய்ய ஆர்வம் வளரும்.

உதாரணம் 1) ரியல் எஸ்டேட் நண்பர் ஒருவரின் தேவைக்காக…..
கேள்விகள்: 1)என்னிடம் 550 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் ID மற்றும் Phone மற்றும் முகவரி போன்ற விபரங்களை சுலபமாக எப்படி சேமிப்பது?
2)அவர்கள் பிரதி மாதம் ரூ.1000.00 வீதம் 45 மாதம் கட்ட வேண்டும்.  அவர்களின் ID மற்றும் அவர்கள் கட்டும் பணம் மற்றும் அவர்கள் பணம் கட்டும் நாள் போன்ற விபரங்களை சுலபமாக எப்படி சேமிப்பது?
3)அவர்களின் கணக்குகளை எப்படி சரி பார்ப்பது?
4)என்னுடைய கணக்குகளை எப்படி சரி பார்ப்பது?
சற்று யோசித்துப் பாருங்கள் 550 வாடிக்கையாளர், 45 மாதம், பிரதி மாதம் ரூ.1000.00 ஆகிய தகவல்களை சாதாரணமாக அடிப்படையான வசதியோடு உள்ளீடு செய்தால் எவ்வளவு நேரம் ஆகும்……
அவருக்கு நான் Excel-லில் செய்து கொடுத்த பதில்
1)   இந்த படத்தை CLICK செய்வதன் மூலம் தோன்றும் FORM  மூலமாக வாடிக்கையாளர்களின் அனைத்து விபரங்களை உள்ளீடு செய்து கொள்ள முடியும்.








2) இந்த படத்தை CLICK செய்வதன் மூலம் தோன்றும் FORM  மூலமாக வாடிக்கையாளர் ID மற்றும் அவர்கள் கட்டும் பணம் மற்றும் அவர்கள் பணம் கட்டும் நாள் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து கொள்ள முடியும்.










3) ID , நாள், பணம் ஆகிய விபரங்கள் உள்ளீடு செய்தவுடன் தானாகவே அடுத்த சீட்டில் அப்லோடு ஆகிவிடும். நிறங்களும் தானாகவே மாறிக் கொள்ளும். அந்த விபரங்களை இங்கே சரிபார்த்துக்கொள்ள முடியும்.


  
4) அப்லோடு ஆன விபரங்கலள் மூலம் வாடிக்கையாளர் மற்றும் நண்பரின் மொத்த கணக்குகளும் தானாகவே மாறிக்கொள்ளும், அதோடு தேவையான ID  மற்றும் மாதத்தின் அடிப்படையின் மூலமும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>தொடரும்..........

No comments:

Post a Comment