Thursday, 23 April 2015

HYPERLINK ADVANCED TIPS

வணக்கம் நண்பர்களே,
இந்தப் பகுதியில் சில TIPS மற்றும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
HYPERLINK….
HYPERLINK என்பது ஒரு இடத்தில் இருந்து கொண்டே குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல முடியும்.
1)ஒரே சீட்டில் அல்லது வேறு சீட்டில் குறிப்பிட்ட வேறு செல்லிற்கு செல்லலாம்,
2)வேறு FILE(ANY FORMAT) OPEN ஆகும்படி செய்யலாம் அல்லது WEB PAGE-க்கு செல்லலாம்.
இந்த இரண்டு செயலுக்கும் பல வழிமுறைகள் உண்டு அதில் முதல் வழிமுறை நம்மில் பலர் அறிந்திருக்கலாம்..…ஆனால் பலரும் பயன்படுத்தாத அதே சமயம் மிக மிக பயனுள்ள மிக மிக எளிமையான சில வழிகள் உண்டு. அவற்றைப் பார்க்கலாமா?
பார்க்கலாம்…. முதல் வழிமுறை:
1)ஒரு செல்லில்(A1) EXCEL TIPS-1 என்றும் (இதற்கான தகவல் SHEET-1 (A20)-ல் இருப்பதாக வைத்துக்கொள்வோம்)
2)ஒரு செல்லில்(A2) EXCEL TIPS-2 என்றும் (இதற்கான தகவல் SHEET-2 (A20)-ல் இருப்பதாக வைத்துக்கொள்வோம்)
3)ஒரு செல்லில்(A3) EXCEL TIPS IMAGE என்றும் (இதற்கான IMAGE DESKTOP-ல் இருப்பதாக வைத்துக்கொள்வோம்)
4) ஒரு செல்லில்(A4) EXCEL TIPS ON TAMIL என்றும் (இதன் மூலம் www.exceltricksintamil.blogspot.com தளத்திற்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்)
GO > INSERT  >  HYPERLINK
ஷார்ட் கட் CTRL + K





இரண்டாம் முறை:
WATCH WINDOW……
இந்த வழிமுறையில் ஒரு இடத்திற்கு செல்வது மட்டுமல்லாமல் மேலும் பல சிறப்பம்சங்களும் இதன் மூலம் அடையளாம். (ஆனால் EXCEL அல்லாத இடத்திற்கு செல்ல முடியாது)
சிறப்பம்சம்:
1)FILE Name 2) Sheet Name 3) Range Name 4)Cell’s Value(With Auto Change Value) 5)Formula 6)Hyperlink (Just Double Click)  
GO > FORMULAS > WATCH WINDOW
ஷார்ட் கட் ALT + M + W
ஒரு விண்டோ தெரியும். அதை மேலே அல்லது கீழே அல்லது தனியாக வைத்துக்கொள்ளலாம்.






அதில் “ADD TO WATCH” என்று தெரியும் அதை நமக்கு தேவையான செல்லை தேர்வு செய்து க்ளிக் செய்யலாம் அல்லது க்ளிக் செய்து தேர்வு செய்யலாம்.



எத்தனை வேண்டுமானாலும் எத்தனை சீட்டிலிருந்தும் சேர்த்துக்கொள்ளலாம் தேவையில்லையெனில் DELETE செய்துக்கொள்ளலாம். எங்கு வேல்யூ மாறினாலும் தானாகவே இங்கு மாறிக்கொள்ளும்



எதை டபுள் க்ளிக் செய்தாலும் அங்கு செல்லலாம்.

மூண்றாம் முறை:
HYPERLINK FUNCTION……
இந்த வழிமுறை நிறைய டேட்டாக்களை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் .
அதாவது ஒரே இடத்தில் (ஒரே செல்லில்) இருந்துக் கொண்டே எந்த சீட்டிலும் எந்த செல்லுக்கும் செல்லலாம்.
உதாரணத்திற்கு
1)Sheet1-ல் (A20)-க்கும்
2)Sheet2-ல் (A20)-க்கும்
3)Sheet3-ல் (A20)-க்கும் செல்வதாக வைத்துக்கொள்ளலாம்
ஏதாவது ஒரு இடத்தில் சீட் பெயர்களை (நிறைய சீட் இருந்தால் VBA Code இருக்கிறது தேவையெனில் தருகின்றேன்) பிழையில்லாமல் டைப் செய்யவும் (ex :J3:J5)
A1 செல்லை செலக்ட் செய்து DATA > DATA VALIDATION > SETTINGS > LIST > SOURCE > SELECT J3:J5 > OK கொடுக்கவும். இப்போது நீங்கள் A1 செல்லில் 3 சீட்டில் எதை வேண்டுமானாலும் செலக்ட் செய்யலாம்.



ஏதாவது ஒரு இடத்தில் ="#'"&A1&"'!A20" என்று பிழையில்லாமல் டைப் செய்யவும் (EX :G10)
B1 செல்லில் =HYPERLINK(G10,"GO THAT CELL") என்று பிழையில்லாமல் டைப் செய்யவும்.





அவ்வளவுதான் A1-ல் நீங்கள் சீட்டை தேர்வு பின் B1-ஐ தொட்டால் அங்கு செல்லலாம்.

என்ன நண்பர்களே பிடித்திருக்கிறதா?
ஒரு சமயம் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி
EXCEL-ல் கணிதம் சம்பந்தம் இல்லாமல் வேறு என்ன செய்யலாம்?
அவருக்கு நான் EXCEL மூலம் அளித்த சில பதில்......












>>இது வரை இல்லையெனில் இனி முடியும்>>>>>தொடரும்.....................

No comments:

Post a Comment