வணக்கம் நண்பர்களே,
இன்று சில டிப்ஸ் மற்றும் சில உதாரணம் பார்ப்போம்…
நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க……
VLOOKUP FUNCTION-ஐ பார்ப்போம்..இந்த FUNCTION எதற்காக பயன்படுகிறது?
இது நிறைய தகவல் இருக்கும் போது நாம் குறிப்பிடும் தகவலைப் பொறுத்து அதைச் சார்ந்த தகவலை தானாக வெளிப்படுத்த உதவும்.
உதாரணத்திற்கு ஒரு மார்க் Mr.X மார்க் லிஸ்ட்,
1)Lookup_value >>>> என்பது நாம் குறிப்பிடும் தகவல்( C4 )
2)Table_array >>>>> என்பது நாம் குறிப்பிடும் தகவலிலுருந்து நமக்கு தேவைப்படும் தகவல் இருக்கும் மொத்த தகவல் ( C13:F17 )
3)Col_index_num >> என்பது நாம் குறிப்பிடும் தகவலிலுருந்து நமக்கு தேவைப்படும் தகவல் எத்தனையாவது COLUMN-ல் உள்ளது ( QUATERLY-2, HALF YEARLY-3, ANNUALY-4)
4)Range_lookup>>> என்பது சரியான தகவல் வேண்டுமா அல்லது தோராயமான தகவல் வேண்டுமா (TRUE என்றால் தோராயமான, FALSE என்றால் மிகச் சரியான)
என்ன நண்பர்களே புரிந்ததா? இன்னும் அட்வான்ஸாக பார்க்கலாமா?
பார்க்கலாம்… அதற்கு முதலில் Range – களுக்கு பெயர் வைத்துக்கொண்டால் சற்று சுலபமாக இருக்கும்.
எப்படி வைப்பது?
முறை 1) வேண்டிய செல்லை அல்லது செல்களை செலக்ட் செய்து Name Box-க்கு சென்று பெயர் டைப் செய்து என்டர் அழுத்தவும்
முறை 2) FORMULAS > DEFINE NAME (ஷார்ட் கட் ALT + M + M) சென்று பெயர் டைப் செய்து Range செலக்ட் செய்துக் கொள்ளலாம்.
1)C4 செலக்ட் செய்து அதற்கு SUB என்றும்
2) C13:F17 Range செலக்ட் செய்து அதற்கு MARKS என்றும் பெயர் வையுங்கள்.
இப்போது =VLOOKUP(C4,C13:F17,2,FALSE) இந்த FORMULA –வில் C4 – க்கு பதில் SUB என்றும், C13:F17 – க்கு பதில் MARKS என்றும் டைப் செய்து எங்கு வேண்டுமானாலும் பேஸ்ட் செய்துக் கொள்ளலாம் 2 - க்கு பதில் வேண்டியதை மாற்றிக் கொள்ளலாம்.
இப்போது இன்னும் அட்வான்ஸாக பார்க்கலாமா?
IF FUNCTION –ஐயும், VLOOKUP FUNCTION –ஐயும் எப்படி ஒன்றாக இனைப்பது எனப் பார்க்கலாமா?
பார்க்கலாம்… IF FUNCTION –ஐ பற்றி போன பகுதியில் பார்த்தோம்
இப்போது Mr.X Mark list –ஐ போல் Mr.Y Mark list ஒன்று தயார் செய்யவும்.
1)C23 செலக்ட் செய்து அதற்கு SUB_Y என்றும்
2)C24 செலக்ட் செய்து அதற்கு ST_NAME என்றும்
3)C32:F36 Range செலக்ட் செய்து அதற்கு MARKS_Y என்றும் பெயர் வையுங்கள்
4)C4 செலக்ட் செய்து அங்கு =C23 என டைப் செய்து கொள்ளவும்.
இப்போது நமது கேள்வியை பார்ப்போம்
ஒரு செல்லில் நாம் குறிப்பிடும் பெயருக்கும், இன்னொரு செல்லில் நாம் குறிப்பிடும் பாடத்திற்கும் தகுந்த பதில் வர வேண்டும்.
என்ன நண்பர்களே பதில் கிடைத்ததா??
சரி அடுத்த பகுதியில் VLOOKUP உடன் வேறு சில FUCTION –களை எப்படி பயனபடுத்துவது என பார்ப்போம்…..அதற்கு முன்…..
ஒரு சமயம் ஒரு நண்பர் விளையாட்டாக விளையாட்டுக்காக கேட்ட கேள்வி… என்ன சார் அப்படி இப்படி என்கிறீர்கள் எனக்கு விருப்பமான கிரிக்கெட் SCOREBOARD உங்களால் தயார் செய்து தரமுடியுமா?
அவருக்கு நான் EXCEL மூலம் அளித்த பதில்…..
முதல் சீட் Instruction
அடுத்த சீட்டில் எத்தனை ஓவர், டீம் பெயர்கள், டீம் ப்லேயர் பெயர்கள் அகியவைகளை உள்ளீடு செய்யவும்(BEGINNING) ரன்களை உள்ளீடு செய்யவும்(START) CLEAR செய்துகொள்ளவும் பட்டன்கள் வைத்துள்ளேன்
எத்தனை ஓவர், டீம் பெயர்கள், டீம் ப்லேயர் பெயர்கள் அகியவைகளை BEGINNING மூலம்உள்ளீடு செய்ய அடுத்தடுது வரும் விண்டோவில் உள்ளீடு செய்ய வேண்டும்
ரன்களை START மூலம் வரும் விண்டோவில் உள்ளீடு செய்ய வேண்டும்.
அடுத்த சீட்டில் முழுமையான SCOREBOARD தெளிவாக தெரியும்.
அடுத்த சீட்டில் CHART முறையில் அதுவும் SCROLL செய்து பார்த்துக் கொள்ளும்படியும் செய்துள்ளேன்.
>>>வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை>>>>>தொடரும்…………………….
No comments:
Post a Comment